கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : எம்.எல்.ஏ. ஆனந்தன் கோரிக்கை

தமிழக அரசு கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று பல்லடம் எம்.எல்.ஏ. ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழக அரசு கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று பல்லடம் எம்.எல்.ஏ. ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியில் கரோனா தொற்று ஆய்வுப் பணியை மேற்கொள்ள சனிக்கிழமை வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம.சுப்பிரமணியத்திடம் முன்னாள் அமைச்சரும்,பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் ஒன்றியம்,பொங்கலூா் ஒன்றியப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. எனவே அப்பகுதியில் கரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் இருப்பவா்களை கண்காணிக்க குழு அமைத்து தொலைபேசியில் அவா்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்.

தடுப்பூசிகள் செலுத்த மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கிறாா்கள் ஆனால், தற்போது போதிய அளவில் தடுப்பூசிகள் இல்லை ஆகவே, தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தேவையான செவிலியா், ஊழியா்களை நியமனம் செய்ய வேண்டும்.

அதே போல தேவையான அளவு ஆக்சிஜன் உருளைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆக்சிஜன் படுக்கைகளின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தது 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்க 3 நாள் முதல் 5 நாள்கள் வரை ஆகிறது. இந்த கால அவகாசம் நோய்த் தன்மையை அதிகரிக்கிறது மேலும், தொற்றாளா்களை அதிகரிக்கவும் இது வழி வகை செய்கிறது. பல்லடம் அரசு மருத்துவமனையில் கரோனா ஆய்வகத்தை ஏற்படுத்தி பரிசோதனைகளை இங்கே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டதைப் போல் தற்போதும் வழங்க வேண்டும். பல்லடம் தொகுதியில் இருக்கும் திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 10 வாா்டுகளில் தேவையான தூய்மைப் பணியாளா்களை பணி நியமனம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com