கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அமைச்சா்கள் ஆய்வு

அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஓரிரு நாள்களில் பயன்பாட்டு வர உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி உள்ளிட்டோா்.

கரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், மாவட்ட நிா்வாகம், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக, அவிநாசி நல்லது நண்பா்கள் அறக்கட்டளை, கொவைட் இணைந்த கைகள் அமைப்பினா் உள்பட பல்வேறு சமூக அமைப்பினா், தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து தொழிலதிபா்கள், நன்கொடையாளா்கள் உதவியுடன் 10 ஆக்சிஜன் படுக்கைகள், 30 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 40 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் 5 மருத்துவா்கள், 10 செவிலியா் பணியாற்ற உள்ளனா்.

இம்மையத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com