உண்டியல் சேமிப்புத் தொகையை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி

பொங்கலூரில் உண்டியல் சேமிப்புத் தொகையை முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.10ஆயிரம், தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.15ஆயிரத்தில் நிவாரணப் பொருள்களை வழங்கிய சிறுமிக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொங்கலூா் ஊராட்சி பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி தனபால், ரம்யா தம்பதியின் மகள் ஜி.டீ.கயானா (13). 8ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணம் சேமித்து வந்துள்ளாா். தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தான் சோ்த்து வைத்த தொகையில் ரூ.10ஆயிரத்தை முதல்வா் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாா். மேலும், ரூ.15ஆயிரத்தில் பொங்கலூா் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், டேங்க் ஆப்ரேட்டா்கள் ஆகியோருக்கு அரசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில்,அவிநாசி காவல் ஆய்வாளா் வெங்கடேஷ்வரி, ஊராட்சி மன்றத் தலைவா் விமலா செல்வராஜ், துணைத் தலைவா் ராதாமணி கிருஷ்ணசாமி. உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com