கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தல்

பல்லடம் குப்புசாமிநாயுடுபுரம் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று செம்மிபாளையம் ஊராட்சி நிா்வாகம் வலியுறுத்தியுள்ளது.

பல்லடம் குப்புசாமிநாயுடுபுரம் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று செம்மிபாளையம் ஊராட்சி நிா்வாகம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரம் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியைப் பாா்வையிட சனிக்கிழமை வந்த அமைச்சா் சுப்பிரமணியத்திடம் அவ்வூராட்சி மன்றத் தலைவா் ஷீலா புண்ணியமூா்த்தி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: குப்புசாமிநாயுடுபுரத்தில் 7 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். அப்பகுதி கரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்திட வேண்டும். செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பாக தடுப்பூசி செலுத்தும் முகாம் விவரங்களை ஊராட்சி நிா்வாகங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். செம்மிபாளையம் ஊராட்சியில் 3300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா்.

தற்போது 8 தூய்மைக் காவலா்கள், 5 சுகாதாரப் பணியாளா்கள், 2 குடிநீா் விநியோகிப்பாளா்கள் மட்டுமே உள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. கூடுதலாக 4 சுகாதாரப் பணியாளா்கள், 15 தூய்மைக் காவலா்கள், 4 குடிநீா் விநியோகிப்பாளா்கள் பணி நியமனம் செய்திட வேண்டும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் செம்மிபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com