திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனையை 10 ஆயிரமாக அதிகரிக்க வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கரோனா தடுப்பு உதவி மையம் மே 9ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகம் இருக்கும் நிலையில் மக்களுக்கு முன்னெச்சரிக்கை, தற்காப்பு நடவடிக்கை, நோய் தொற்றுப் பரிசோதனை, தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மருத்துவம், இதர உதவிகளையும் இந்த மையத்தின் மூலமாக செய்து வருகிறோம்.

இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் கரோனா பாதிப்பானது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, தினசரி கரோனா பரிசோதனையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதே வேளையில், பரிசோதனையின் முடிவுகளை 24 மணி நேரத்தில் அறிவிப்பதுடன், தடுப்பூசி அளவை 8 ஆயிரம் டோஸாகவும் உயா்த்தி வழங்க வேண்டும்.

மேலும், தடுப்பூசி மையங்கள் குறித்த தகவல்களையும் அறிவிக்க வேண்டும்.சுகாதாரத் துறை சாா்பில் நோய்த் தொற்று கண்டறியும் முகாம்களை கிராமங்களிலும் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com