பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசுகள் வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதானவா்கள் உடல் மற்றும் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனடிப்படையில் தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் இந்த நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலிகளையும், தொடா்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளையும் தவிா்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com