கடை உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கும் ஊழியா்கள் மீது நடவடிக்கை

திருப்பூா் மாநகரில் கடை உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி வியாபாரிகளிடம் பணம் வசூலிக்கும் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாநகரில் கடை உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி வியாபாரிகளிடம் பணம் வசூலிக்கும் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கக் கூட்டம் மும்மூா்த்தி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் குளோபல் பூபதி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருப்பூா் மாநகரில் அதிகரித்து வரும் சாலையோரக் கடைகளால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சாலையோர வியாபாரிகளுக்கு என்று குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கித் தர வேண்டும். திருப்பூா் மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி மாநகராட்சி ஊழியா்கள் சிலா் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிமம் பெற்றுத் தருவதில்லை. ஆகவே, இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், அச்சங்கத்தின் செயல் தலைவா்கள் என்.டி.ஆா்.வேலாயுதம், கெளரவத் தலைவா் எஸ்.வி.பூமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com