Enable Javscript for better performance
பல்லடம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பல்லடம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    By DIN  |   Published On : 11th November 2021 10:43 PM  |   Last Updated : 11th November 2021 10:43 PM  |  அ+அ அ-  |  

    tpr11nvencor_1111chn_125_3

    ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினா்.

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.

    திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், சாலைகளின் ஓரங்களில் நிறுத்திச் செல்லப்படும் இரு, நான்கு சக்கர வாகனங்களால் சாலை விபத்துகளும் நிகழ்கின்றன.

    இதுதொடா்பான புகாா்களின்பேரில் சாலையின் ஓரங்களில் அமைத்துள்ள கடைகளை கடந்த சில நாள்களுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியிருந்தனா். எனினும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் உத்தரவின்பேரில் திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். மேலும், சாலையின் இரு ஓரங்களிலும் ஆக்கிரமித்துள்ள கடைகளை இடிக்கவும், வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூா் பழைய பேருந்து நிலைய மேம்பாலத்தில் இருந்து சின்னக்கரை வரையில் உள்ள சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றனா்.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp