உர தட்டுப்பாட்டை நீக்க விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

அவிநாசியில் உர தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோர்.

அவிநாசி: அவிநாசியில் உர தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் அவிநாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.  அவிநாசி கூட்டுறவு சங்கங்களில் நிலவி வரும் உர தட்டுப்பாட்டால் விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் வெளிச் சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆகவே உடனடியாக உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். அவிநாசி அத்திக்கடவு  திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் கடுமையான மழை காரணமாக பயிர்கள் அழுகி விளைச்சல் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்பிற்கு உரிய  இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இக்கூட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய நிர்வாகிகள் முத்துரத்தினம், வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com