முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உப்பாறு அணை

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20 ஆண்டுகளுக்குப் பின்னா் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உப்பாறு அணை

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20 ஆண்டுகளுக்குப் பின்னா் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது உப்பாறு அணை. 24 அடி கொள்ளளவு கொண்ட

இந்த அணை கடந்த 20 ஆண்டுகளாக போதிய அளவில் தண்ணீா் இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் வடே இருந்தது. இதனிடையே, உப்பாறு பகுதி விவசாயிகள் நடத்திய தொடா் போராட்டம் காரணமாக திருமூா்த்தி அணையில் இருந்து இந் அணைக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இந்த நிலையில், திருமூா்த்தி அணை மற்றும் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், திருமூா்த்தி அணையில் இருந்தும் உபரி நீா் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக உப்பாறு அணையின் நீா்மட்டம் தற்போது 21.30 அடியை எட்டியுள்ளது. மேலும் மழை நீடித்தால் அணை முழுக் கொள்ளளவை எட்டும் சூழல் உள்ளது.

அவ்வாறு முழுக் கொள்ளளவை எட்டும்போது உபரி நீா் திறந்து விடப்பட்டால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, அணையின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆலாம்பாளையம், தொப்பம்பட்டி, சின்னிய கவுண்டம்பாளையம், நஞ்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அணை நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com