காங்கயத்தில் அகற்றப்படவுள்ள மரங்கள்: உதவி ஆட்சியா் ஆய்வு

காங்கயத்தில் சாலையை அகலப்படுத்துவதற்காக அகற்றப்படவுள்ள மரங்கள் குறித்து தாராபுரம் உதவி ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சாலையோர மரங்களை ஆய்வு செய்யும் உதவி ஆட்சியா் ஆனந்த் மோகன், வட்டாட்சியா் சிவகாமி உள்ளிட்டோா்.

காங்கயம் நகரம், கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் காா்மல் பள்ளியில் இருந்து முத்தூா் சாலை பிரிவு வரை ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், சாலையோரம் உள்ள 25 வேப்ப மரங்கள், 15 புளியமரங்கள் அகற்றப்பட உள்ளன.

இந்நிலையில், அகற்றப்பட உள்ள இந்த மரங்களை தாராபுரம் உதவி ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தீபாவளியை முன்னிட்டு, தனியாா் வணிக நிறுவனங்களின் பட்டாசுக் கடை அமையவுள்ள இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, வருவாய் ஆய்வாளா் கனகராஜ், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com