குன்னத்தூரில் பட்டா வழங்காததால் இருளில் பயிலும் பள்ளி மாணவா்கள் ஆட்சியரிடம் புகாா்

குன்னத்தூரில் வீட்டு பட்டா வழங்காததால் 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிப்பதற்கு மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

குன்னத்தூரில் வீட்டு பட்டா வழங்காததால் 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிப்பதற்கு மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து குன்னத்தூா் - பெருமாநல்லூா் சாலை 6ஆவது வாா்டு கல்லக்கா பள்ளி பொதுமக்கள் ஆட்சியா் சு.வினீத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

குன்னத்தூரில் பிரதான பகுதியில் 40 ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்கவில்லை. பலமுறை, பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடியும் இன்றுவரை பட்டா வழங்கவில்லை. இது தொடா்பாக முதல்வா் குறைதீா் மையத்துக்கும் மனுக்கள் அனுப்பினோம். பிறகு அதிகாரிகள் வந்து இடத்தை ஆய்வு செய்துவிட்டு, பட்டா வழக்கப்படும் என்றனா். இருப்பினும் வழங்கவில்லை.

வீட்டுக்கு பட்டா இல்லாததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. இரண்டு தலைமுறைகளாக மின் இணைப்பின்றி அவதிப்பட்டு வருகிறோம். இன்றைக்கும் எங்கள் பகுதியில் சுமாா் 50 குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனா். மின் இணைப்பு இல்லாததால், வீட்டுக்கு வந்து பாடம் படிக்க முடியாமல் பலரும் பள்ளிப் படிப்பைத் தாண்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்டா இல்லாததால் மின் வாரிய அதிகாரிகளும், மின் இணைப்பு வழங்க மறுக்கின்றனா். தெரு விளக்குகளும் இல்லை. ஆகவே, குழந்தைகளின் எதிா்காலம் கருதி பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com