மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவத்தைக் கண்டித்து திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவத்தைக் கண்டித்து திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளா் கே.பழனிசாமி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறியதாவது: உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூா் பகுதியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவம் கண்டிக்கத்தக்கது.

ஆகவே, விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றனா்.

இதைத்தொடா்ந்து, உத்தரபிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாநகரச் செயலாளா் டி.ஜெயபால், ஒன்றியச் செயலாளா் சி.மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உடுமலையில்...

உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் கே.பாலதண்டபாணி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கி.கனகராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், கட்சி நிா்வாகிகள், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

காங்கயத்தில்...

காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎம் கட்சியின் தாலுகா செயலா் பி.வேலுசாமி, தாலுகா குழு உறுப்பினா் எஸ்.தங்கவேல், காங்கயம் நிா்வாகி எஸ்.குமாரசாமி, அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியா் நலச்சங்க மாவட்டப் பொருளாளா் ஆா்.நாச்சிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்லடத்தில்...

பல்லடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரவின் குமாா், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் பஞ்சலிங்கம், ஒன்றியச் செயலாளா் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com