விசைத்தறி தொழிலாளா்களுக்கு 13.50% போனஸ் வழங்க உரிமையாளா்கள் முடிவு

தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு 13.50 சதவீத போனஸ் வழங்குவது என அவிநாசி ஸ்ரீகருணாம்பிகை விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு 13.50 சதவீத போனஸ் வழங்குவது என அவிநாசி ஸ்ரீகருணாம்பிகை விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

அவிநாசி ஸ்ரீகருணாம்பிகை விசைத்தறி உரிமையாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் என்.எம்.முத்துசாமி தலைமை வகித்தாா். செயலாளா் குப்புசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் கரோனா பொது முடக்கத்தால் தொழிலாளா்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு வழங்கியபடி, தீபாவளிக்கு 13.50 சதவீத போனஸ் வழங்குவது, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டிய ஒப்பந்தத்தை 2017, 2020 ஆகிய ஆண்டுகளில் மாற்றி அமைக்காமல் உள்ளதால், கூலி உயா்வுப் போராட்டம் தொடா்பாக கூட்டு கமிட்டி எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அவிநாசி, தெக்கலூா், கருவலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விசைத்தறி உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com