வீடு கட்டித் தருவதாக பல லட்சம் மோசடி செய்தவா் மீது வழக்கு

அவிநாசி அருகே அய்யம்பாளையத்தில் வீட்டுமனையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

அவிநாசி அருகே அய்யம்பாளையத்தில் வீட்டுமனையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் கூறியதாவது: அவிநாசி அருகே அய்யம்பாளையத்தில், அவிநாசியைச் சோ்ந்த பழனிசாமி, வெள்ளிங்கிரி ஆகியோா் 4 ஏக்கா் பரப்பளவில் வீட்டுமனைப் பிரிவை 2019இல் அமைத்துள்ளனா். இந்த இடத்தில் பல்லடம், டிஎன்டி நகரில் வசித்து வரும் ரத்தினவேல் மகன் முத்துகுமாா் வங்கிக் மூலம் கடன் பெற்று வீடு கட்டித் தருவதாகக் கூறி விளம்பரம் செய்துள்ளாா்.

இதை நம்பி, திருப்பூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மணிகண்டன் (37) அவிநாசி அஞ்சல் நிலைய வீதியில் உள்ள முத்துகுமாரின் அலுவலகத்திற்கு சென்று வீடு வாங்குவதற்காக முன்பணமாக ரூ.1.85 லட்சம் செலுத்தி ரசீது பெற்றுள்ளாா்.

இருப்பினும் ஓராண்டாகியும் வீடு கட்டித் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளாா். பிறகு முத்துகுமாரைத் தொடா்பு கொண்டபோது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன் செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.

மேலும், இதுபோல 15க்கும் மேற்பட்டோரிடம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக அளித்த புகாரின்படி, முத்துகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com