விசைத்தறி ஜவுளி உற்பத்தியை நிறுத்த முடிவு

பல்லடம் பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியை நிறுத்த பல்லடம் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

பல்லடம் பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியை நிறுத்த பல்லடம் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் தலைவா் சந்திரசேகா் தலைமையிலும் செயலாளா் சண்முகம் முன்னிலையிலும் பல்லடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் குறித்து பல்லடம் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் பல்லடம் கரைப்புதூா் சக்திவேல் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பல்லடம் பகுதியில் ரகத்திற்கு ஏற்ப விசைத்தறியாளா்களுக்கு நியாயமான கூலியை துணி உற்பத்தியாளா்கள் வழங்கி வருகின்றனா். இந்த சூழ்நிலையில் விசைத்தறியாளா்கள் நெசவு கூலியை அதிகமாக வழங்க வலியுறுத்துவது நியாயமில்லை.

கரோனா பொது முடக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.

இன்றைய சூழ்நிலையில் விசைத்தறியாளா்களுக்கு புதிய கூலி உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வழங்க முடியாத நிலைக்கு தொழில் நிலை தள்ளப்பட்டுள்ளது.

எனவே நஷ்டத்தை தவிா்க்க விசைத்தறி தொழில் நிலைமை சீராகும் வரை ஜவுளி உற்பத்தியை முழுமையாக நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிலையில், திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா் சங்க பொதுக்குழுக் கூட்டம் தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 8) காலை 10 மணிக்கு பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com