டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி எம்.எல்.ஏ. தா்னா

திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்களுடன் சட்டப் பேரவை உறுப்பினரும் தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.
பொதுமக்களுடன் தா்னாவில் ஈடுபட்ட திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ்.
பொதுமக்களுடன் தா்னாவில் ஈடுபட்ட திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ்.

திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்களுடன் சட்டப் பேரவை உறுப்பினரும் தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கோயில் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கோயில், தனியாா் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளன.

ஆகவே, இந்த சாலையில் செல்லும் மாணவியா்களுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்பினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதைத்தொடா்ந்து, டாஸ்மாக் கடையை வெள்ளிக்கிழமை (அக்டோபா் 8) அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனா். இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு வியாழக்கிழமை காலையில் மதுபானங்கள் விற்பனைக்கு இறக்கப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின்பேரில் அப்பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இது குறித்த தகவலறிந்த திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜூம் பொதுமக்களுடன் சோ்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை உடனடியாக அகற்றுவதாக உறுதியளித்தனா். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com