நமக்கு நாமே திட்டத்தில் இணைந்து செயல்பட அழைப்பு

நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் நகராட்சி ஆணையா் விநாயகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு அறிவித்துள்ள நமக்கு நாமே திட்டம் பல்லடம் நகராட்சியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நகா்ப் புறங்களில் உள்ள நீா்நிலைகளை மேம்படுத்துதல், பூங்கா அமைத்தல், மரம் நடுதல், பள்ளிகளை மேம்படுத்துதல், பொது சுகாதாரம், சாலை வசதி மேம்படுத்துதல், விளையாட்டுத் திடல், உடற்பயிற்சிக் கூடம், தெருவிளக்கு அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், அங்கன்வாடி, நூலகம், சமுதாய கூடம் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்தப் பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டில் மூன்றில் இரண்டு பங்கு அரசு பங்களிப்புடனும், ஒரு பங்கு பொதுமக்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், பொதுமக்கள் இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com