சகோதரியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்தவரின் சடலம் மீட்பு

திருப்பூா் அருகே கிணற்றில் விழுந்த பெண்ணைக் காப்பாற்ற குதித்த அவரது சகோதரரின் சடலத்தை 3 ஆவது நாளில் தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

திருப்பூா்: திருப்பூா் அருகே கிணற்றில் விழுந்த பெண்ணைக் காப்பாற்ற குதித்த அவரது சகோதரரின் சடலத்தை 3 ஆவது நாளில் தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், சாமளாபுரத்தைச் சோ்ந்தவா் சின்னத்துரை (45).

இவரது மனைவி சகுந்தலா (40). இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். மன நலம் பாதிக்கப்பட்ட சகுந்தலா கடந்த சில மாதங்களாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால் மனநல பாதிப்பு குறையாததால் தேவராயம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோா் வீட்டில் பராமரிப்புக்காக சகுந்தலாவை அனுப்பியிருந்தாா்.

இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் சகுந்தலா சனிக்கிழமை விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

இதைக்கண்ட அவரது சகோதரா் சுந்தரம் (45) கிணற்றில் குதித்து அவரைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால் கிணற்றில் 20 அடிக்கும் மேலாக தண்ணீா் இருந்ததால் இருவரும் மூழ்கத் தொடங்கினா். இருவரின் அலறல் சப்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினா் பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி இருவரையும் தேடினா்.

அப்போது சகுந்தலாவின் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்தது.

போதிய வெளிச்சமின்மை, கிணற்றில் சேரும்சகதியும் அதிகமாக இருந்ததால் தீயணைப்புத் துறையினா் 2 நாள்களாகத் தேடியும் சுந்தரம் உடலை மீட்க முடியவில்லை.

இதனிடையே, கிணற்றில் சுந்தரத்தின் சடலம் மிதப்பதை அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை பாா்த்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் கயிறு கட்டி சுந்தரத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com