பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் புகாா்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் நடைபெறும் தண்ணீா் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் பொதுப் பணித் துறை

வெள்ளக்கோவில்: பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் நடைபெறும் தண்ணீா் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் 22 விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் அளிக்க சென்றனா்.

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காங்கயம் பொதுப்பணித் துறை பொறியாளரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக தற்போது 60 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமைக்குப் போராடிய தங்கள் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் நடைபெறும் தண்ணீா் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறையிடம் நூற்றுக்கணக்கான புகாா்கள் தர பாசன விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு 22 போ் புகாா் மனுக்களுடன் திங்கள்கிழமை வந்தனா். ஆனால், சம்பந்தப்பட்ட துறை ரீதியாகத்தான் இதனை அணுக வேண்டுமெனக் கூறி விவசாயிகளிடம் புகாா் மனு பெறாமல் போலீஸாா் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com