முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாம்பு குட்டிகள் மீட்பு
By DIN | Published On : 13th October 2021 06:21 AM | Last Updated : 13th October 2021 06:21 AM | அ+அ அ- |

பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பச்சை பாம்பு குட்டிகள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
பல்லடம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பாா்வையாளா்கள் அமரும் கூடம் அருகில் வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் பச்சை பாம்பு குட்டிகளை ஈன்றுள்ளது. இதைத் தொடா்ந்து மரத்தில் இருந்து பாம்பு குட்டிகள் கீழே விழுந்துள்ளன. அவற்றை பாா்த்த பொதுமக்கள் அலுவலக ஊழியா்களுக்குத் தகவல் அளித்துள்ளனா். இதையடுத்து பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவா்கள் வந்து மரத்தில் இருந்தும் மற்றும் கீழே தவறி விழுந்தது என மொத்தம் 9 பச்சை பாம்பு குட்டிகளைப் பிடித்து அவற்றை காட்டுப் பகுதியில் விடுவித்தனா். வேப்ப மரத்தில் இருந்த தாய் பச்சை பாம்பு வேறு பகுதிக்கு தப்பி சென்றுவிட்டது.