மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தல்: காங்கயத்தில் திமுக வெற்றி

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலில் காங்கயம் 10ஆவது வாா்டில் திமுக 5,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலில் காங்கயம் 10ஆவது வாா்டில் திமுக 5,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கயம், வெள்ளக்கோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய 10ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு கடந்த அக்டோபா் 9 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

இந்த வாா்டில், திமுக சாா்பில் கிருஷ்ணவேணி, அதிமுக சாா்பில் லட்சுமி, நாம் தமிழா் கட்சி சாா்பில் வனிதா, அமமுக சாா்பில் ராதா, தேமுதிக சாா்பில் கிருஷ்ணவேணி உள்பட 7 போ் போட்டியிட்டனா். இதற்கான வாக்கு எண்ணிக்கை காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்

கிருஷ்ணவேணி(திமுக) 22,790

லட்சுமி (அதிமுக)- 17,424

வனிதா (நாதக)-804

ராதா (அமமுக)-153

கிருஷ்ணவேணி-(தேமுதிக) 149

வாக்கு வித்தியாசம்-5,366

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com