வெள்ளக்கோவிலில் ரூ.69.36 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.69.36 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.69.36 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, லாலாப்பேட்டை, வாணியம்பாடி, பழனி, புதுவயல், கம்பளியம்பட்டி, முத்தம்பட்டி, மூலனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 150 விவசாயிகள் 78,639 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி ஆா்.எஸ், நஞ்சை ஊத்துக்குளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

தேங்காய் பருப்பு கிலோ ரூ.73.00 முதல் ரூ.104.00 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.100.05. மொத்தம் ரூ.69 லட்சத்து 36 ஆயிரத்து 433க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com