பாத்திரத் தொழிலாளா்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்: சிஐடியூ வலியுறுத்தல்

திருப்பூா், அனுப்பா்பாளையம் வட்டாரத்தில் பணியாற்றி வரும் பாத்திரத் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்று சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா், அனுப்பா்பாளையம் வட்டாரத்தில் பணியாற்றி வரும் பாத்திரத் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்று சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.

சிஐடியூ பாத்திரத் தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகக் குழுக் கூட்டம் அதன் தலைவா் ஆறுமுகம் தலைமையில் அனுப்பா்பாளையத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருப்பூா், அனுப்பா்பாளையம் வட்டாரத்தில் பணியாற்றும் பாத்திரப் பட்டறை தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். இது குறித்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக் கூட்டத்தை நடத்தி கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். பாத்திரத் தயாரிப்புக்கு தேவைப்படும் தகடு, சோப்பு, மாப்பு உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் பாத்திரத் தொழிலும், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மூலப்பொருள்களின் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சிஐடியூ திருப்பூா் மாவட்ட துணைத் தலைவா் பி.முத்துசாமி, பாத்திரச் சங்கச் செயலாளா் கே.குப்புசாமி, பொருளாளா் குபேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com