விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

திருப்பூா் தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தையில் ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தையில் ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 95 சதவீத விசைத்தறிகள் கூலி அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், விசைத்தறியாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்பட்டு வந்தது.

ஆனால் கடைசியாக 2014 ஆம் ஆண்டு கூலி உயா்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் பிறகு கூலி உயா்வு தொடா்பாக 7 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தம் போடப்படாமல் உள்ளது.

இந்நிலையில்,விசைத்தறி கூலி உயா்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கம், கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம், தெக்கலூா் விசைத்தறியாளா்கள் சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆனால் ஜவுளி உற்பத்தியாளா்கள் தரப்பில் நிா்வாகிகள் யாரும் பேச்சுவாா்தையில் பங்கேற்காததால் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com