கல் குவாரி அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு

ருப்பூரில் விதிகளுக்கு மாறாக மொரட்டுப்பாளையத்தில் 11 புதிய கல் குவாரி அமைப்பதற்கான கருத்துக்கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கல் குவாரி அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு

திருப்பூா்: திருப்பூரில் விதிகளுக்கு மாறாக மொரட்டுப்பாளையத்தில் 11 புதிய கல் குவாரி அமைப்பதற்கான கருத்துக்கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஊத்துக்குளியில் உள்ள பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் 11 புதிய கல் குவாரி அமைப்பதுத் தொடா்பாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாசு கட்டுப்பாட்டு வாரிய

இணையதளம் வெளியிட்டுள்ள கல் குவாரிகளுக்கான 13 பக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் திட்ட தளத்தின் வரைபடம், திட்ட தளத்தின் புகைப்படம் இல்லை. இதில் பல்வேறு விவரங்கள் மறைக்கப்பட்டும், தவறாகக் காட்டப்பட்டும் உள்ளது. ஆகவே, மொரட்டுப்பாளயம் ஊராட்சியில் புதியதாக அமையவுள்ள 11 கல்குவாரிகள் சட்டத்துக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கும் புறம்பாக நடந்துள்ளதால் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தையும், இத்திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீா்க் கூட்டத்தில் 785 மனுக்கள் பெறப்பட்டன:

மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் வீட்டுமனை பட்ட, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 785 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மனுதாரா்களின் முன்னிலையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சிவகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com