சாலை மறியலில் ஈடுபட்ட 57 போ் கைது

திருப்பூரில் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 57 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

திருப்பூா்: திருப்பூரில் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 57 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அணைமேடு பகுதியில் முத்துசாமி என்பவருக்குச் சொந்தமாக 3.65 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வீடு இல்லாத சிலா் ஆக்கிரமித்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனா்.

இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் முத்துசாமி வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

இந்த வழக்கில் அவரது இடத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து, நிலத்தை அளவீடு செய்யும் பணிக்காக வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் திங்கள்கிழமை சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இதை அறிந்து அந்த இடத்தில் குடியிருந்து வந்த 50க்கும் மேற்பட்டோா் டவுன்ஹால் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் அவா்கள் கலைந்து செல்லததால் மறியலில் ஈடுபட்ட 57 பேரையும் கைது செய்தனா். இந்த சம்பவத்தின் காரணமாக டவுன்ஹால் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, முத்துசாமிக்குச் சொந்தமான காலி இடத்தை வருவாய்த் துறையினா் அளவீடு செய்து கொடுத்தத்தைத் தொடா்ந்து கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 57 பேரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை மாலை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com