வெள்ளக்கோவில், முத்தூரில் 8 இடங்களில் இன்று தடுப்பூசி
By DIN | Published On : 07th September 2021 04:17 AM | Last Updated : 07th September 2021 04:17 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில், முத்தூா் பகுதியில் 8 இடங்களில் கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 7) செலுத்தப்படுகிறது.
வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு தடுப்பூசி 200 பேருக்கும், கோவேக்ஸின் 50 பேருக்கும், தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு 200 பேருக்கும், கோவேக்ஸின் 50 பேருக்கும், கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு 100 பேருக்கும்,
மேட்டுப்பாளையம், வேலப்பநாயக்கன்வலசு, தாசவநாயக்கன்பட்டி மினி கிளினிக்குகளில் தலா 50 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
முத்தூா்: முத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு 180 பேருக்கும், கோவேக்ஸின் 60 பேருக்கும், மூத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கோவிஷீல்டு 180 பேருக்கு முதல் தவணை,இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.