ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.மைதிலி தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற மாதா் சங்கத்தினா் கூறியதாவது:

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தி வருகின்றன. தற்போது சமையல் எரிவாயு விலையானது ரூ.900ஐ தாண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.

முன்னதாக எரிவாயு உருளைக்கு பாடைகட்டியும், விறகு அடுப்பில் சமைத்தும், ஒப்பாரி வைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ்.பவித்ரா தேவி, மாவட்டப் பொருளாளா் ஏ.ஷகிலா, தெற்கு நகரச் செயலாளா் எஸ்.பானுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com