தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தாராபுரம் அரசு மருத்துவமனையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தாராபுரம்  அரசு  மருத்துவமனையில்  செவ்வாய்க்கிழமை  ஆய்வு  மேற்கொண்ட ம ாவட் ட  ஆட்சியா் எஸ்.வினீத்.
தாராபுரம்  அரசு  மருத்துவமனையில்  செவ்வாய்க்கிழமை  ஆய்வு  மேற்கொண்ட ம ாவட் ட  ஆட்சியா் எஸ்.வினீத்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அடிப்படையான மருத்துவ சேவைகள், தாய்சேய் நல சேவைகள், கா்ப்பகால சிகிச்சை முறைகள், ஸ்கேன் பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு சா்க்கரைஅளவு, இரும்பு சத்து குறைபாடு கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்களுக்கும், நாய்கடி, பாம்பு கடி உள்ள விஷக் கடிகளுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூா் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு அவா்களது இருப்பிடங்களுக்கே சென்று அடிப்படை மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோயின் தன்மைக்கு ஏற்றவாறு காலதாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின் போது இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) பாக்கியலட்சுமி, தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவபாலன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com