பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கடைக்கு ‘சீல்’பல்லடம் நகராட்சி ஆணையா் எச்சரிக்கை
By DIN | Published On : 10th September 2021 05:17 AM | Last Updated : 10th September 2021 05:17 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி செலுத்தாமல் ஊழியா்களைப் பணியில் ஈடுபடுத்தும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று பல்லடம் நகராட்சி ஆணையா் விநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
பல்லடம் அரசு கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவா்கள் இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பல்லடம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள், உரிமையாளா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்கள் கடைகளில் பணியாற்றி வருவது தெரியும்பட்சத்தில் பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் அறிவுரையின்படி அக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றாா்.