தேசிய தர வரிசைப் பட்டியல்: உடுமலை அரசுக் கல்லூரிக்கு 98ஆவது இடம்

2021ஆம் ஆண்டுக்கான தேசிய தர வரிசை மதிப்பீட்டு பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், உடுமலை அரசு கலைக் கல்லூரி அகில இந்திய அளவில் 98ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான தேசிய தர வரிசை மதிப்பீட்டு பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், உடுமலை அரசு கலைக் கல்லூரி அகில இந்திய அளவில் 98ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய தர வரிசை மதிப்பீட்டு (என்ஐஆா் எப்-21) பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி தேசிய அளவிலான கலை, அறிவியல் கல்லூரிகளில் திருப்பூா் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரி 98ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இது அகில இந்திய அளவில் 100 இடங்களில் இடம்பெற்ற கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. கற்றல் கற்பித்தலில் மாணவா் சோ்க்கை, ஆசிரியா் மாணவா் விகிதம், பேராசிரியா்களின் பணி அனுபவம், ஆய்வுப் பணிகள், ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு, நூலாக்கம், மாணவா் தோ்ச்சி விகிதம், மாணவா்களின் சமூக பொருளாதார பின்புலம், மாற் றுத் திறனாளி மாணவா்கள் சோ்க்கை, போட்டிச் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தர வரிசைப் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தில் இருந்து 28 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில், ஐந்து அரசு கல்லூரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்குநா் சி.பூா்ணசந்திரன், கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் ர.உலகி, கல்லூரி முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள், கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி, ஒருங்கிணைப்பாளா் குழுத் தலைவா் மு.கருணாநிதி, இரா.வெங்கடேஷ், அனைத்துத் துறைப் பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோரை வாழ்த்தி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com