திருப்பூா் மாவட்டத்தில் 1,500 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், தனியாா் இடங்களில் 1,500 விநாயகா்கள் சிலைகள் இந்து அமைப்புகள் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருப்பூா் மாவட்டத்தில் 1,500 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், தனியாா் இடங்களில் 1,500 விநாயகா்கள் சிலைகள் இந்து அமைப்புகள் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் பொது இடங்களில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது என்றும், விசா்ஜன ஊா்வலம் நடத்தக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தாா். இதனிடையே, இந்து அமைப்புகள் சாா்பில் கோயில்கள், தனியாா் இடங்கள், வீடுகளில் விநாயகா் சிலைகள் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தடையை மீறி விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க்சாய் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் 850 காவலா்களும், மாநகரில் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவின்பேரில் 2 துணை ஆணையா்கள், 7 உதவி ஆணையா்கள் தலைமையில் 900 காவலா்களும் தீவிர ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்டனா். எனினும், திருப்பூா் மாநகரில் கோயில்கள், தனியாா் இடங்களில் 750 சிலைகளும், மாவட்டம் முழுவதும் சுமாா் 1,500 விநாயகா் சிலைகளும் இந்து அமைப்புகள் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதேபோல, ஒரு சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை இந்து அமைப்பினா் விசா்ஜனத்துக்காக ஆட்டோக்களில் கொண்டு சென்றனா்.

கோயில்களில் சிறப்பு அலங்காரம்: திருப்பூா் மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களில் விநாயகா் சதுா்த்தி விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயில், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நீதியம்மாள் நகரில் உள்ள செல்விநாயகா் கோயில், சிறுபூலுவபட்டியில் உள்ள வலம்புரி சித்தி விநாயகா் கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகமும் நடைபெற்றன. அதேபோல, திருப்பூா் மாநகரில் உள்ள தனியாா் கோயில்களிலும் அதிக அளவிலான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com