திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th September 2021 11:44 PM | Last Updated : 11th September 2021 11:44 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 91,285ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 939 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 72 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 89,409ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது.