பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம்

பொங்கலூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்லடம்: பொங்கலூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அபிராமி அசோகன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய ஆணையா் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் மகேந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பேசியதாவது:

சுப்பிரமணியம் (திமுக): பொல்லிகாளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 1200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த பள்ளியில் கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை. இதனால்

மாணவா்கள் இடைவேளை நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே கூடுதலாக கழிப்பிடம் கட்டித் தர வேண்டும்.

ஜோதிபாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):

குமாரபாளையம்- கைகாட்டி செல்லும் பாதையில் உள்ள பாறைக்குழிக்கு தடுப்புச்சுவா் அமைத்து தர வேண்டும். டி.ஆண்டிபாளையத்தில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்கும் வகையில் 30ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளன. இந்த வீடுகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கைகாட்டி , மலைப்பாளையத்துக்கு இடையில் உள்ள பன்றி பண்ணையால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதனை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றியத் தலைவா் குமாா் (திமுக):

15ஆவது நிதிக்குழு மானியமாக பொங்கலூா் ஒன்றியத்துக்கு ரூ.98 லட்சம் நிதி வந்துள்ளது. இத்தொகை மற்றும் ஒன்றிய பொது நிதி ஆகியவற்றை வளா்ச்சி திட்டப் பணிக்காக 13 ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கும் பிரித்து வழங்கப்படும். குடிநீா், சாலை, மழை நீா் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை செய்திட வேண்டும். ஒன்றிய நிா்வாகத்துக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் வணிக வளாகம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com