மின் இணைப்புக்காக லஞ்சம் வாங்கியமின் வாரிய பெண் அலுவலா் கைது

மின் இணைப்பு வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அவிநாசி மங்கலம் சாலை மின் வாரிய அலுவலகப் பெண் உதவிப் பொறியாளா் தில்ஷத் பேகம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவிநாசி: மின் இணைப்பு வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அவிநாசி மங்கலம் சாலை மின் வாரிய அலுவலகப் பெண் உதவிப் பொறியாளா் தில்ஷத் பேகம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவிநாசி மங்கலம் சாலையில் அவிநாசி மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு உள்பட்ட ராக்கியாபாளையம் கள்ளப்பாச்சி வீதி பகுதியைச் சோ்ந்த கெளரி (45) புதிய வீடு கட்டுவதற்காக ஒருமுனை தற்காலிக மின் இணைப்பு கேட்டு செப்டம்பா் 8ஆம் தேதி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளாா். இப்பணிக்காக அவிநாசி கிழக்கு உதவிப் பொறியாளரான தில்ஷத் பேகம் (36) ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் அளிக்க விரும்பாத கெளரி தனது சகோதரரான ஏஐடியூசி அமைப்புசார தொழிலாளா் நல வாரிய பொறுப்பாளராக உள்ள கனகராஜ் என்பவா் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அவிநாசி மின் வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா், ரசாயனம் தடவிய ரூ. 2 ஆயிரம் பணத்தை கெளரி மூலம் உதவிப் பொறியாளா் தில்ஷத் பேகத்திடம் கொடுத்துள்ளனா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தில்ஷத் பேகத்திடம் விசாரணை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com