மாணவா்களுக்கு கரோனா அரசுப் பள்ளி மூடல்

திருப்பூா் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு பள்ளி மூடப்பட்டுள்ளது.

திருப்பூா்: திருப்பூா் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு பள்ளி மூடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளா்வுகளின் அடிப்படையில் கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் உள்ள வகுப்புகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதன்படி திருப்பூா் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் 8 பேருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவின்பேரில் சின்னசாமி அம்மாள் பள்ளி புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் 3 நாள்களுக்கு மூடப்பட்டது. மேலும், பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

30 போ் பாதிப்பு: மாவட்டத்தில் தற்போது வரையில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்று வரும் 20 மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல,ஆசிரியா்கள் 9 போ், வட்டாரக் கல்வி அலுவலா் ஒருவா் என மொத்தம் 30 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com