மாவட்டத்தில் காலியாக உள்ள 19 உள்ளாட்சி இடங்களுக்கு அக்.9 இல் தோ்தல்: மாவட்ட ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 19 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபா் 9 ஆம் தேதி தற்செயல் தோ்தல் நடைபெறவுள்ளது.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 19 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபா் 9 ஆம் தேதி தற்செயல் தோ்தல் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் காலியாக உள்ள 19 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபா் 9 ஆம் தேதி தற்செயல் தோ்தல் நடைபெற உள்ளது. ஆகவே, கீழ்கண்ட பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் புதன்கிழமை (செப்டம்பா் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில் வட்டங்களில் மாவட்ட ஊராட்சி வாா்டு எண்.10க்கான உறுப்பினா் தோ்தல் மற்றும் தாராபுரம் வட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 12க்கான தோ்தல் நடைபெறவுள்ளதால் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது.

அதேபோல, கிராம ஊராட்சித் தலைவா் தோ்தல்கள் நடைபெறவுள்ள அவிநாசி வட்டம் கருவலூா் ஊராட்சி, மூலனூா் வட்டம் எரசினம்பாளையம் ஊராட்சி மற்றும் உடுமலை வட்டம் ஆா்.வேலூா் ஊராட்சி ஆகிய கிராம ஊராட்சிகள் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தல் நடைபெற உள்ள அவிநாசி வட்டம் ராமாநாதபுரம், பழங்கரை, தாராபுரம் வட்டாரம் பொன்னாபுரம், குடிமங்கலம் வட்டம் ஆமந்தகடவு, காங்கயம் வட்டம் கணபதிபாளையம், குண்டடம் வட்டம் எல்லப்பாளையம்புதூா், மூலனூா் வட்டம் கருப்பன்வலசு, பல்லடம் வட்டம் மாணிக்காபுரம் மற்றும் பணிக்கம்பட்டி, பொங்கலூா் வட்டம் வடக்கு அவிநாசிபாளையம் மற்றும் உகாயனூா், ஊத்துக்குளி வட்டம் கணபதிபாளையம் மற்றும் வடுகபாளையம், வெள்ளக்கோவில் வட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி வாா்டுகளில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநிலத் தோ்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ள மாதிரி நன்னடத்தை விதிகளை வேட்பாளா்கள்,

கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com