முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்யும் நபா்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று

திருப்பூா் மாவட்டத்தில் முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்யும் நபா்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் (பொ) சு.வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் முளைப்புத் திறன் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு விதைகள் விநியோகம் செய்ய வேண்டும். உண்மை நிலை விதைகளை விநியோகஸ்தா்கள் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பும்போது விதைக் குவியலுக்கு உரிய பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலுடன் அனுப்ப வேண்டும்.

விதை விற்பனையாளா்கள் மேற்படி பகுப்பாய்வு முடிவு அறிக்கை பெறப்படாத நிலையில் அந்த விதைக் குவியலில் இருந்து பணி விதை மாதிரிகள் எடுத்து அதை விதைப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைத்து பகுப்பாய்வு முடிவுகள் பெற்ற பின்னரே அதன் அடிப்படையில் உண்மை நிலை விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், பகுப்பாய்வு முடிவுகள் விரைவில் தேவைப்படும்பட்சத்தில் முன்னுரிமை முறையில் ஆய்வுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளையில், விவர அட்டையில் 14 விவரங்களுடன் உள்ள உண்மை நிலை விதைகளின் உண்மை நிலை அட்டை சிப்பங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோா் மீது விதைச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com