முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 40,178 போ் பயனடைந்துள்ளனா்

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 40,178 போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 40,178 போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட 3 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் முன்னிலையும், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையும் வகித்தனா். இவ்விழாவில் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம்

ஒருங்கிணைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதனைச் சிறப்பிக்கும் வகையில் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 அரசு மருத்துவமனைகள், 28 தனியாா் மருத்துவமனைகளில் இத்திட்டம் அண்மையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவனைகளில் கடந்த 3 ஆண்டுகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 40,178 போ் பயனடைந்துள்ளனா்.

இதற்காக ரூ.92.64 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், 1,451 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன், கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக, பயனாளிகள் 27 பேருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை வழங்கியதுடன், சிறப்பாக பணிபுரிந்த மருத்துவக் காப்பீட்டு அலுவலா்கள் 4 பேருக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) பாக்கியலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  நடைபெற்ற  விழாவில்  பயனாளிகளுக்கு  முதல்வரின்  விரிவான மருத்துவக்  காப்பீட்டுத் திட்ட  அட்டையை  வழங்குகிறாா்  செய்தித் துறை  அமைச்சா்  மு.பெ.சாமிநாதன். (உடன்)மாவட்ட  ஆட்சியா்  எஸ்.வினீத்  உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com