ரூ.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 285 விவசாயிகள் தங்களுடைய 2,806 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 927 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 12 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா்.

பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ .8,524க்கும், குறைந்தபட்சமாக ரூ. 6,200க்கும், சராசரியாக ரூ.7,350க்கும் விற்பனையானது.

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 68 லட்சத்து 5 ஆயிரத்து 367 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com