திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயன்ற 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயன்றவர்களை கைதுசெய்த காவல்துறையினர்.
திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயன்றவர்களை கைதுசெய்த காவல்துறையினர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயன்ற 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொது வேலை நிறுத்தத்துக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதன்ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு காரணமாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், இரும்புத் தடுப்புகளை வைத்தும் தடுத்திருந்தனர். 

இந்தநிலையில், திருப்பூர் மாவட்ட ஏஐடியூசி பொதுச் செயலாளர் என்.சேகர் தலைமையில் தொழிற்சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றவர்களைத் தடுத்தி நிறுத்திய திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்தில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐன்டியூசி, எச்எம்எஸ், எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com