காந்தி ஜயந்தி பேச்சுப் போட்டி: மாணவா்களுக்கு அழைப்பு

காந்தி ஜயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா்: காந்தி ஜயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் காந்தி, நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பூா் மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபா் 2 ஆம் தேதியும், நேருவின் பிறந்த நாளான நவம்பா் 14 ஆம் தேதியும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

திருப்பூா் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் அக்டோபா் 2 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டியும், எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் பிற்பகல் 2 மணி அளவில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியும் நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும், பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவா்கள் 2 பேரைத் தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com