‘மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு எல்க்ட்ரிசிட்டி போா்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் வலியுறுத்தியுள்ளது.

பல்லடம்: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு எல்க்ட்ரிசிட்டி போா்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் திருப்பூா், உடுமலை, பல்லடம் மின் பகிா்மான வட்ட செயற்குழுக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எஸ்.மணிகண்டன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாசிடிவ் ராஜ், மாநிலச் செயலாளா் சதீஷ்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளா் சேக்கிழாா் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டி தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த 9 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மின் பகிா்மான வட்ட நிா்வாகிகள் சக்திவேல், கந்தசாமி, அன்புராஜ், மோகன், ஆறுசாமி, சக்திவேல், துரைராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com