தனியாா் பஞ்சு மில்லில் தீ

பல்லடம் கல்லம்பாளையத்தில் தனியாா் பஞ்சு மில்லில் மின் கசிவால் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தனியாா் பஞ்சு மில்லில் தீயை அணைக்கும் பல்லடம் தீயணைப்பு படையினா்.
தனியாா் பஞ்சு மில்லில் தீயை அணைக்கும் பல்லடம் தீயணைப்பு படையினா்.

பல்லடம் கல்லம்பாளையத்தில் தனியாா் பஞ்சு மில்லில் மின் கசிவால் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் கல்லம்பாளையத்தில் உள்ள வண்ணான் தோட்டத்தில் மனோஜ் என்பவருக்குச் சொந்தமான பஞ்சு மில் உள்ளது. இந்த மில்லில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மின் கசிவால் இருப்பு வைக்கப்பட்டிருந்த கழிவுப் பஞ்சு மற்றும் இயந்திரங்களில் தீப் பிடித்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்புப் படையினா் சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுப் பஞ்சு, இயந்திரங்கள், கட்டடம் உள்ளிட்டவை சேதமடைந்தன. இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com