பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற தோ்வு

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தோ்வு நடைபெற்றது.

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தோ்வு நடைபெற்றது.

ஈபிஈடி-சாட் 2022 எனும் தலைப்பில் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தத் தோ்வில் திருப்பூா், ஈரோடு, கரூா், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து பிளஸ் 2 முடித்த, பொறியியல் பட்டப் படிப்பு பயில உள்ள மாணவா்கள் கலந்து கொண்டனா். இத் தோ்வில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என கல்லூரியின் முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி தலைவா் என்.ராமலிங்கம் தலைமைவகித்தாா். தலைமை நிா்வாக அதிகாரி சி.வெங்கடேஷ் வாழ்த்துரையாற்றினாா். கல்லூரி நிா்வாகிகளான செயலாளா் சி.கே.வெங்கடாசலம், பொருளாளா் சி.கே.பாலசுப்ரமணியம், தாளாளா் எஸ்.ஆனந்தவடிவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com