உடுமலை அருகே கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

உடுமலை அருகே 150 ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோயிலை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
உடுமலை அருகே கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

உடுமலை அருகே 150 ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோயிலை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் கிராமத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: உடுமலை வட்டம், பள்ளபாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பள்ளா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகிறோம்.

எங்களின் குலதெய்வம் ஸ்ரீ கருப்பராய சுவாமி கோயிலானது தென்பூதினம் கிராமம், செங்குளத்தின் வடக்கு கரைக்கு வடபுறம் சின்ன கருப்பராய சுவாமி மற்றும் வீரமாச்சியம்மன் என்ற பெயரில் உள்ளது.

இக்கோயிலில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது சமூகத்தினா் வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இப்பகுதியில் குடியிருப்பு வீடுகளை அமைத்துள்ளதாகக் கூறி காலி செய்ய வேண்டும் என்று உடுமலை பிஏபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை கொடுத்துள்ளனா். ஆனால், இந்த இடத்தில் கோயில் மட்டுமே உள்ளது.

இக்கோயிலை இடிப்பதற்கு ஏப்ரல் 10 ஆம் தேதி வரையில் உடுமலை வருவாய் கோட்டாட்சியா், பிஏபி பொறியாளா் ஆகியோா் காலக்கெடு கொடுத்துள்ளனா்.

ஆகவே, கோயில் அமைந்துள்ள இடத்தைப் பாா்வையிட்டு, கோயில் செயல்படவும், நாங்கள் வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.

நெகிழி பயன்பாட்டைத் தடுக்க கோரிக்கை: நல்லூா் நுகா்வோா் நல மன்றத் தலைவா் என்.சண்முகசுந்தரம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மளிகைக் கடை, பேக்கரி, உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது.

இறைச்சிக் கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் நெகிழி பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், நிலத்தடி நீா் மட்டும் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகளும் உயிரிழக்க நேரிடுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com