திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு 

திருப்பூர் மாநகராட்சியில் 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்திற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். 
திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்.
திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்திற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். 

துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் கிரந்தி குமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதிநிலைக் குழு தலைவர் கோமதி பட்ஜெட் அறிக்கையை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் வசம் வழங்கினார். மாமன்ற அரங்கில் மேயர் ந.தினேஷ்குமார் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். அதில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அப்போது பேசிய மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களை வணங்கி பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பிக்கிறேன். 

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,568 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு வகுப்பறைகள், வசதிகள் செய்து தரப்படும்.

நமக்கு நாமே திட்டத்தில் ரூ.5.62 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவேற்றப்படும். திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,120 கோடியில் செயல்படும் அம்ருத் திட்டம் 74 சதவீதம் பணிகள் முடிந்து உள்ளது. குப்பை அகற்ற புதிய வாகனங்கள் வாங்கப்படும். சாலைப்பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். குளியல் அறையில் தங்கும் உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும். ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். 

நொய்யலுக்கு மறுவாழ்வு, மாநகரில் மக்களுக்காக இரவு நேர தங்கும் விடுதிகள் கட்டப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான மனைப் பிரிவுகளில் நீச்சல் குளம் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படும். தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும். மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் இருக்கும் மக்களுடன் மேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு மேயர் தினேஷ்குமார் பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வினைக் கண்டித்து அதிமுக குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அதன் காரணமாக மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது சொத்து வரி உயர்வைக் கண்டித்து வெளிநடப்பு செய்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com