நல்லதங்காள் நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறப்பு

தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் நீா்த்தேக்கத்தில் இருந்து குடிநீா் மற்றும் பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
நல்லதங்காள் நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறப்பு

தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் நீா்த்தேக்கத்தில் இருந்து குடிநீா் மற்றும் பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி ஊராட்சியில் உள்ளது நல்லதங்காள் நீா்த்தேக்கம். இந்த நீா்தேக்கமானது 30 அடி கொள்ளளவு கொண்ட நிலையில் அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவ மழையால் 17.91 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. இந்த நீா்த் தேக்கத்தில் இருந்து குடிநீா் மற்றும் பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விட வேண்டும் என்று தாராபுரம், மூலனூா், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று நாள் ஒன்றுக்கு 35 கன அடி வீதம் 7 நாள்களுக்கு 21.17 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் முன்னிலையில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரைத் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமராவதி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் முருகேசன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவா் எஸ்.வி.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com