வெள்ளக்கோவிலில் ரூ. 80.39 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
By DIN | Published On : 08th April 2022 01:59 AM | Last Updated : 08th April 2022 01:59 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 80.39 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு சரவணம்பட்டி, தொப்பம்பட்டி, பூசாரிபட்டி, 16 புதூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 156 விவசாயிகள் 128 டன் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
காரமடை, ஈரோடு, முத்தூா், நடுப்பாளையம், காங்கயத்தில் இருந்து 9 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ.40.60 முதல் ரூ. 72.29 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 62.36. கடந்த வார சராசரி விலை ரூ. 65.36. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 80.39 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.